7 1 2 3 5 6

எதிரணியை மிரள செய்யும் பவுன்சர்ஐ தடை செய்ய வேண்டுமா ???... வேண்டாமா ???

1962-ல் பார்படாஸூக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில், மேற்கிந்தியத் தீவுகள் பவுலர் சார்லி கிரிஃப்பித் பந்துவீச்சில் இந்திய அணி கேப்டன் நரி கான்ட்ராக்டரின் தலையில் அடிபட்டது. மூக்கு, காதுகளில் ரத்தம் வழிந்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கான்ட்ராக்டருக்கு ஆறு நாட்கள் நினைவு திரும்பவில்லை. ரத்தம் செலுத்தப்பட்டு உயிர் பிழைத்தார். பிறகு அவர் சர்வதேச கிரிக்கெட் பக்கமே வரவில்லை. கடைசியாக, ஒரேயொரு டெஸ்ட் ஆட நினைத்தார் கான்ட்ராக்டர். ஆனால் அதற்கு அவர் மனைவி அனுமதிக்கவில்லை.
பிலிப் ஹியூஸ் மரணச் செய்தி கேட்டு, அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த நாரி கான்ட்ராக்டர், பவுன்சர் பற்றி சொல்லும்போது “ பவுன்சரை தடைசெய்தால் கிரிக்கெட் ஆட்டம் சோபிக்காது, பவுலர்களும் பேட்ஸ்மேன்களும் தங்கள் திறமைகளை காண்பிக்க முடியாது. பவுன்சர்கள் இப்போதுள்ள கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்க படவேண்டும். அதிர்ச்சி அடையாதிர்கள், ராமன் லம்பா களத்தில் அடிபட்டு இறந்தபின் யாரும் பார்வர்ட் ஷார்ட்லெக்கில் { forward short leg fielding) பீல்ட் செய்யவில்லையா என்ன?” என்கிறார்
பவுன்செரால் அடிபட்டு உயிர் பிழைத்த ஒரே கிரிக்கெட் வீரர் நாரி கான்ட்ராக்டர் (வயது 80 இந்தியாவிற்காக 31 டெஸ்ட் மேட்ச் கள் விளையாடியவர்) குறிப்பிட்ட ராமன் லம்பா,, 1998-ல் முன்னாள் இந்திய வீரரான ராமன் லம்பா, டாக்காவில் நடந்த கிளப் ஆட்டத்தின்போது ஷார்ட் லெக்கில் ஃபீல்டிங் செய்துகொண்டிருந்தார். குறிப்பிட்ட ஓவரில் மூன்று பந்துகளே மீதமுள்ளதால் ஹெல்மெட் தேவையில்லை என முடிவெடுத்தார் லம்பா. அந்த சமயம் பார்த்து பேட்ஸ்மேன் வேகமாக லம்பாவின் பக்கம் அடிக்க, பந்து அவர் முன்தலையைத் தாக்கிவிட்டு கீப்பர் பக்கம் சென்று கேட்ச் ஆனது. விக்கெட்டை கொண்டாட எல்லோரும் ஓடிவந்தபோது கீழே விழுந்து கிடந்தார் லம்பா. பிறகு எழுந்து, தடுமாறியபடி பெவிலியனுக்குத் திரும்பினார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் நினைவிழந்தார். சிலநாள்கள் கழித்து இறந்துபோனார். அப்போது அவருக்கு வயது 38.

Video Courtesy: 3 News

பிலிப் ஹியூஸின் மரணம்: கிரிக்கெட் விளையாடும்போது நியூசவுத் வேல்ஸ் பவுலர் சான் அபாட் வீசிய பவுன்சர் பந்தை எதிர் கொள்ளும் போது, கழுத்தில் அடிபட்டு ரத்த நாளங்கள் வெடித்து மூளையில் ரத்தம் பாய்ந்து மரணம் அடைந்தார். வீடியோ படத்தை (பார்க்க வீடியோ ) பந்து தலையில் படவில்லை கழுத்தில்தான் பட்டது தெரிகின்றது. அவரது மரணம் அரிதானது (Freakish accident' gave Hughes little chance of survival) என்கிறார்கள் மருத்துவர்கள்


ஹெல்மெட் அவசியமா :
மற்ற விளையாட்டுகளை போலில்லாமல் , கிரிக்கெட்டில் ஹெல்மெட் அணிவது கட்டாயாமாக்கப் படவில்லை ( இங்கிலாந்தில் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு ஹெல்மெட் கட்டாயமாக்கப்பட்டுள்ளது) எனவே கிரிக்கெட் வீரரர்கள் தங்களது விருப்பதிற்கேற்ப ஹெல்மெட் அணிகிறார்கள்

கிரிக்கெட்டில் ஹெல்மெட் பிறந்த கதை :
1933-ல் ஆஷஸ் சீரீஸ்க்குப்பின் , இங்கிலாந்து பேட்ஸ்மேன், ( Patsy Hendren, ) பட்சி ஹென்றேன் , வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் , கிரிக்கெட் வரலாற்றில் முதன் முறையாக ஹெல்மெட் அணிந்து , விளையாட வந்தார். அது அவரது மனைவி பிரத்யோகமாக, மூன்றடுக்கு ஸ்பாஞ்சுடன் இரண்டு காதுகளையும் மூடும்படி தயாரித்திருந்தார். அதன்பின்னர்,கிரிக்கெட் வீரர்கள் ஹெல்மெட் அணிவது அரிதானது , கிரிகெட் விளையாடிற்காக தயாரிக்கப்பட்ட ஹெல்மெட்டை முதன் முதலில் 1978-ல் , பார்படோஸில், வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது ஆஸ்திரேலியன் வீரர் (Graham Yallop) கிரகாம் யல்லோப் அணிந்தபோது பலர் கிண்டலடித்தார்கள் .

மசூரி(MASURI) சொன்னது என்ன ??
கிரிக்கெட் ஹெல்மெட்டின் முன்னணி தயாரிப்பாளர்களான இங்கிலாந்தின் மசூரி (MASURI) நிறுவனத்தினர், பிலிப் ஹியூஸ் மரணம் பற்றி குறிப்பிடும்போது , பிலிப் ஹியூஸ் அணிந்திருந்த ஹெல்மெட் ,பழய மாடல் , தங்களது தற்போதைய மாடல் அகலமானதும் ,கழுத்தையும் கவர் செய்யும்படி அமைக்கபட்டுள்ளது (பார்க்க படம்) என்கின்றனர் இந்த புதிய மடல் எவ்வகையிலும் அடிபடாமல் பேட்ஸ்மேன்ஐ காப்பாற்றுமா என்ற கேள்விக்கு பதில்லை . தயாரிப்பாளர்களின் , கியாரண்டி , வாரண்டி, பற்றி நமக்கு தெரியும் தானே ??!!

இந்திய வீரர்கள் என்ன சொல்கிறார்கள் :/i>
கவுதம் கம்பீர் “பிலிப் ஹியூஸ் அணிந்திருந்த ஹெல்மெட் ,பழய மாடல் ஹெல்மெட் என்றாலும், என்னுடையது அதனினும் பழயது, எந்த ஹெல்மெட் என்பது முக்கியமல்ல, அடிபடாமல் இருக்க அதிர்ஷ்டம் வேண்டும். பிலிப் ஹியூஸ்க்கு, காயம் பட்ட இடம் மிகவும் மிருதுவான (DELICATE) இடம் “
ஹர்பஜன்சிங்: “ எல்லோரும் ஹெல்மெட் பற்றி பேசுகிறார்கள். நெஞ்சில் அணியவேண்டிய பேடு பற்றி சொல்வதில்லை , நான் செஸ்ட் பேடு அணியாமல் விளைய்டுவதில்லை , இது இல்லாமலிருந்தால் விலா எலும்புகள் முறிய வாய்ப்புள்ளது “ என்கிறார்
எல்லாவற்றுக்கும் முத்தாய்பாக, டெல்லியின் விக்கெட் கீபர் , புனித் பிஷ்ட் சொல்வது “ யார் என்ன அணிந்திருந்தாலும் , வீசப்படுகிற பந்தில் உங்கள் பெயர் எழுதப்பட்டிருந்தால் எந்த ஹெல்மெட்டாலும் உங்களை காப்பாற்றமுடியாது “"If your name is written on that delivery, no helmet can work,"(Helmet se kuch nahin hota hain. Agar ball pe naam likha hoga toh kuch nahin kar sakte )
Feelings of the Indian players:

கிரிக்கெட்டில் நிகழ்ந்த சோக சம்பவங்கள்
வேகமான பவுன்சரால் தான் ஒரு பேட்ஸ்மேன் தாக்கப்படுவார் என்று கிடையாது. ஆஃப் ஸ்பின் பந்தால் தாக்கப்பட்டு இறந்தவர் உண்டு. ஸ்டம்பின் பைல்ஸ் பட்டு கண் பறிபோனவர் உண்டு.
1 ஆஸ்திரேலியாவின் விக்கெட் கீப்பர் (Bert Whitefield) பெர்ட் ஓய்ட்டுபில்டு, 1932-ல் இங்கிலாந்து பாடிலைன் பவுலர் லார்ட்வூட் வீசிய பந்தால் இறந்தார்
2.ராமன் லம்பா ,(1998) பீல்ட் செய்யும்போது பேட்ஸ்மேன் அடித்த பந்தால் தாக்கப்பட்டு இறந்தார்.
3. பாகிஸ்தானின் அப்துல் அஸிஸ்(1959) , off spin பந்தால் நெஞ்சில் அடிபட்டு இறந்தார். அப்போது அவருக்கு வயது 17தான்.
4. தென் ஆப்பிரிக்காவின் புகழ் பெற்ற விக்கெட் கீப்பரான மார்க் பவுச்சருக்கு நடந்தது விநோதம். ஸ்டெம்பிலுள்ள பெயில்ஸால் இடது கண்ணை இழந்தவர். 2012ல் பயிற்சி ஆட்டம் ஒன்றில், இம்ரான் தாஹீர் வீசிய சுழற்பந்து ஸ்டெம்பை பதம் பார்த்தது. அப்போது ஸ்டெம்பின் மீது இருந்த பைல்ஸ், கீப்பிங் செய்துகொண்டிருந்த பவுச்சரின் இடது கண்ணைத் தாக்கியது. கண்ணிலிருந்து ரத்தம் கொட்டியதால் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. கண் மோசமாக பாதிக்கப்பட்டதால், 998 சர்வதேச டிஸ்மிஸல்களோடு கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார் பவுச்சர்.
5. இங்கிலாந்து அம்பயர் 72 வயதான ஜென்கின்ஸ் ஒரு லீக் ஆட்டத்தின் போது பீல்டர் எறிந்த பந்து பட்டு இறந்துவிட்டார்.
6. BREAKING NEWS: பிலிப் ஹியூஸ் மரணத்திற்கு இரண்டு நாட்கள் கழித்து (22/11/2014),இஸ்ரேலின் முன்னாள் கேப்டனும் அம்பயருமான ஹில் ஆஸ்கார் (55) பேட்ஸ்மேன் அடித்த பந்து பட்டு இறந்தார்.
7. இதுவரை கிரிக்கெட் விளையாடும் போது 9வீரர்கள் மைதானத்திலேய ஹார்ட் அட்டாக்கால் இறந்திருக்கிறார்கள்.


எனெவே புனித் சொன்னதை கொஞ்சம் மாற்றி சொல்லலாம் “வீசப்படுகிற பந்தில் உங்கள் பெயர் எழுதப்பட்டிருந்தால் யாராலும் / எதனாலும் உங்களை காப்பாற்றமுடியாது.




for more details read this in English


  • அடிலெய்ட் டெஸ்டின் முதல் பந்து பவுன்சராக இருக்க வேண்டும்: பாண்டிங் விருப்பம்.
  • பிலிப ஹியூஸின் அகால மரணத்தினால் வீரர்கள் மத்தியில் எழுந்துள்ள
  • ஒருவகை கசப்புணர்வுக்கு மருந்து டெஸ்ட் போட்டியின் முதல் பந்து பவுன்சர்தான் ..
  • என்கிறார் ரிக்கி பாண்டிங்...
  • முதல் இந்திய-ஆஸி டெஸ்ட் டிசம்பர் 09-ல் தொடங்குகிறது ..
  • பிலிப் ஹியூஸ் பவுன்சர் தாக்கி அகால மரணமடைந்ததையடுத்து
  • ஆஸ்திரேலிய நாடே துக்கம் அனுஷ்டித்து வருகிறது...
  • இந்நிலையில் பயிற்சி ஆட்டத்தில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களும்,
  • வலைப்பயிற்சியில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்களும்
  • பவுன்சர்களை சரமாரியாகவே வீசினர்....!
  • அடிலெய்டில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் முதல் நாள் ஆட்டத்தில்,
  • மொகமது ஷமி, வருண் ஆரோன், உமேஷ் யாதவ் சுதந்திரமாக பவுன்சர்களை
  • கிரிக்கெட் ஆஸ்திரேலியா பேட்ஸ்மென்களுக்கு எதிராக வீசினர்....
  • நன்றி ராய்ட்டர்ஸ் 07/12/14


enjoy... it is reloading the happiness..